இறக்குமதி செய்திகள்

தாவர எண்ணெய் இறக்குமதி 21% உயர்வு

தாவர எண்ணெய் இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்து 10.47 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 8.63 லட்சம் டன்னாக இருந்தது. பாமாயில்உள்நாட்டு பயன்பாட்டுக்கு தேவைப்படும் 1.80 கோடி டன் தாவர எண்ணெயில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இறக்குமதியாகும் தாவர எண்ணெயில் பாமாயிலின் பங்கு 71 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் பாமாயிலுக்கான ஏற்றுமதி வரியை முற்றிலும் நீக்கி உள்ளன. எனவே, கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 2.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 10.47 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில், 10.18 லட்சம் டன் சமையல் எண்ணெயும், 28,853 டன் மற்ற வகை எண்ணெயும் அடங்கும். இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில், பாமாயில் 6.44 லட்சம் டன்னிலிருந்து 6.98 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி அதிகபட்சமாக 48,498 டன்னிலிருந்து 1.32 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய் இறக்குமதி 1.41 லட்சம் டன்னிலிருந்து 1.61 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.

Leave a Reply