ஜவுளி & ஆயத்த ஆடைகள்

திருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி ரூ.23,050 கோடி­யாக உயர்வு

திருப்பூர் : ‘‘கடந்த, 201516ம் நிதி­யாண்டில், திருப்பூர் ஆடைகள் ஏற்­று­மதி, 16.3 சத­வீதம் உயர்ந்து, 23,050 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது,’’ என, திருப்பூர் ஏற்­று­ம­தி­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் ஏ.சக்­திவேல் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த நிதி­யாண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி, 8 சத­வீதம் உயர்ந்து, 1.10 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­க­ளிடம் இருந்து, அதிக அளவில் ‘ஆர்­டர்’கள் குவிந்­ததால், இந்த வளர்ச்சி சாத்­தி­ய­மாகி உள்­ளது. புதிய வாடிக்­கை­யா­ளர்கள் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால், இந்­தாண்டும், வளர்ச்சி தொடரும். ஐரோப்­பிய நாடு­க­ளுடன், தாராள வர்த்­தக ஒப்­பந்தம் கையெ­ழுத்­தானால், திருப்பூர் ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி, இரு மடங்கு அதி­க­ரித்து, 50 ஆயிரம் கோடி ரூபா­யாக உயர வாய்ப்­பு உள்­ளது.

சீனா, தயா­ரிப்பு துறைக்கு கொடுத்து வரும் முக்­கி­யத்­து­வத்தை குறைத்துக் கொண்டு, தகவல் தொழில்­நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் துறையில் கவனம் செலுத்த துவங்­கி­யுள்­ளது. அதனால், கடந்த ஓராண்டில், சீனாவின் ஜவுளி ஏற்­று­ம­தியில், ஆயத்த ஆடை­களின் பங்கு, 15 சத­வீ­தத்தில் இருந்து, 7 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, இந்­திய ஆயத்த ஆடைகள் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு, வள­மான வர்த்­தக வாய்ப்பை வழங்­கி­யுள்­ளது. திருப்பூர் ஆடை தயா­ரிப்பு நிறு­வ­னங்கள், நிலை­யான வர்த்­தக வளர்ச்­சியை எதிர்­நோக்­கி­யுள்­ளன. இவ்­வாறு அவர் கூறினார்.

Leave a Reply