துறைமுகங்களில் கையாளப்படும் சரக்குகளின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. நடப்பு 2014-15ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.29 சதவீதம் வளர்ச்சி அடைந்து 14.30 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 13.71 கோடி டன் சரக்கு மட்டுமே கையாளப்பட்டது.
இந்த தகவலை இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு தற்காலிகமாக வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம் நடப்பு நிதியாண்டில் முடிந்த காலாண்டில் 1.28 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது 0.03 சதவீதம் அதிமாகும். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கு 9.38 சதவீதம் அதிகரித்து 74.15 டன்னாக இருந்தது.
Leave a Reply