வணிகச் செய்திகள்

துறை அங்கீகாரம் வேண்டும்: ரீடெய்ல் நிறுவனங்கள் கோரிக்கை

பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில் ரீடெய்ல் (சில்லறை) நிறுவனங்கள் தங்களுக்கு துறை ரீதியான அங்கீகாரம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்திய ரீடெய்ல் துறை 2017-ம் ஆண்டு 47 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயரக்கூடும். அப்போது உலகிலேயே சில்லறை வர்த்தகத் துறையில் ஐந்தாவது பெரிய நாடாக இருக்கும். இந்த சூழ்நிலையில், இந்த தகவல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு இத்துறைக்கு அங்கீகாரம் வேண்டும் என்று வுட்லாண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹர்கிரத் சிங் தெரிவித்தார்.

இதே கருத்தைத்தான் சில்லறை வர்த்தக நிறுவனங் களின் சங்கத்தலைவர் குமார் ராஜகோபாலன் தெரிவித்தார். இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரீடெய்ல் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் அரசாங்கத்தின் துறை அங்கீகாரம் வேண்டும் என்றார். துறை அங்கீகாரம் வழங்கும்போது ஒட்டுமொத்த ரீடெய்ல் பிரிவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று டாடா குழும நிறுவனமான இன்பினிட்டி நிறுவனத்தின் சிஇஓ அஜித் ஜோஷி தெரிவித்தார்.

Leave a Reply