காபி & தேயிலை

தேயிலை ஏற்றுமதி உரிமம் இரண்டு தினங்களில் கிடைக்க ஏற்பாடு

தேயிலை ஏற்றுமதி உரிமம் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.தேயிலை வாரியம், தேயிலை ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்கி வருகிறது. தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும், இரு வகையான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. தற்காலிக ஏற்றுமதி உரிமத்திற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாகும்.

தேயிலை உரிமம் கோரி விண்ணப்பிப்போர், 10க்கும் மேற்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இவற்றை பரிசீலித்து, ஏற்றுமதிக்கான உரிமம் பெற, 10 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை ஆகிறது. இத்தகைய தாமதத்தை தவிர்த்து, விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள், ஏற்றுமதி உரிமம் வழங்கும் நடைமுறையை, தேயிலை வாரியம் அமல்படுத்திஉள்ளது.இதன்படி, இனி, பல்வேறு ஆவணங்களை அளிக்காமல், அயலுறவு வர்த்தக தலைமை இயக்கு னரகம் வழங்கும்,மிக முக்கியமான, இறக்குமதி-ஏற்றுமதி சான்றிதழை மட்டும் சமர்ப்பித்து, ஏற்றுமதி உரிமம் பெறலாம்.

இதன் மூலம், ஏற்றுமதியாளர்கள், தேவையற்ற அலைச்சலையும், வீண் காலதாமதத்தையும் தவிர்த்து, விரைந்து தேயிலை ஏற்றுமதியை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியம், சென்ற ஆண்டு டிசம்பர் முதல், போலி தேயிலை ஏற்றுமதியாளர்களை கண்டறிந்து, அவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து, சென்ற ஆண்டு, 2,800 ஆக இருந்த தற்காலிக ஏற்றுமதி உரிமம் பெற்ற ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கை, தற்போது, 290 ஆக குறைந்துள்ளது. அதுபோன்று, நிரந்தர ஏற்றுமதி உரிமம் பெற்றவர்களின் எண்ணிக்கை, 470ல் இருந்து, 185 ஆக குறைந்துள்ளது.

Leave a Reply