காபி & தேயிலை

தேயிலை தொழி­லுக்கு நெருக்­கடி

கால­நிலை மாற்றம், உற்­பத்திச் செலவு அதி­க­ரிப்பு போன்­ற­வற்றால், தேயிலை தொழி­லுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது என, தென்­னிந்­திய தேயிலை கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா, ஆண்­டு­தோறும் சரா­ச­ரி­யாக, 120 கோடி டன் தேயிலை உற்­பத்தி செய்­கி­றது. 23 கோடி டன் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. தென் மாநி­லங்­களில், 24 கோடி டன் தேயிலை உற்­பத்தி செய்­யப்­பட்டு, 9 கோடி டன் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து, தென்­னிந்­திய தேயிலை கூட்­ட­மைப்பின் தலைவர் தர்­மராஜ் கூறி­ய­தா­வது:கால­நிலை மாற்­றத்தால், தேயிலை உற்­பத்தி பாதிக்­கப்­பட்டு உள்­ளது. தேயிலை உற்­பத்தி செலவும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. ஊழி­யர்­க­ளுக்கு அதிக சம்­பளம் தர வேண்டி உள்­ளது. ஆனால், தேயிலை விலை குறை­வாக உள்­ளது. இதனால், கடும் நெருக்­கடி ஏற்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Leave a Reply