சிறுதொழில் வளர்ச்சி உதவி

தொழில் தொடங்க சிறந்த மாநிலம்: தமிழகம் முதலிடம்

இந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைப்பு 26 மாநிலங்களில் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் சிறுதொழில் நிறுவனங்களிடம் இந்த ஆய்வை நடத்தியது. இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டதாகவும் இது 9 மாதங்களாக நடந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிறப்பான தொழில் கொள்கை, ஊக்கங்கள் அளிப்பது, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. குஜராத் மாநிலம் தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது.

Leave a Reply