தோல் பொருட்கள்

தோல் பொருட்கள் ஏற்றுமதி: 44 கோடி டாலராக உயர்வு

நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதத்தில், 44.40 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 43.90 கோடி டாலராக இருந்தது என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சில் (சி.எல்.இ.,) தெரிவித்துள்ளது.பாரம்பரிய சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இந்திய தோல் பொருட்களுக்கான தேவை மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால், சென்ற ஜூன் மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது.

இதையடுத்து, ஏற்றுமதியாளர்களின் கவனம், லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட புதிய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது என, சி.எல்.இ.,-ன் செயல் இயக்குனர் ஆர்.ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 3.02 சதவீதம் அதிகரித்து, 120 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வரும் 2017ம் ஆண்டிற்குள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, 1,400 கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இத்துறையின் வேலைவாய்ப்பும், தற்போதைய, 25 லட்சம் என்ற அளவிலிருந்து, 50 லட்சமாக உயரும் என, சி.எல்.இ., தெரிவித்துள்ளது.

Leave a Reply