இறக்குமதி செய்திகள்

நகை இறக்குமதி ஜனவரியில் அதிகரிப்பு

ஆபரண கற்கள் மற்றும் நகை இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று, நகை ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 2013ம் ஆண்டு ஜனவரியில் 14,026 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண கற்கள் மற்றும் நகைகள் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் 15,161 கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண கற்கள் மற்றும் நகைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக அந்த குழு தெரிவித்துள்ளது. பட்டை தீட்டாத கச்சா வைரம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்றும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது

Click Hereநன்றி தினகரன்

Leave a Reply