அரிசி & சிறுதானியங்கள்

நடப்பாண்டில் அரிசி ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

இந்தியாவில் இருந்து அதிகளவில் அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று, ‘அக்ரி வாட்ச்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் குறிப்பிட்ட காலத்தில் பருவ பொய்த்த போதிலும், சில பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் பருவ மழை பெய்த போதிலும் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஓரளவிற்கு நெல் உற்பத்தியாகியுள்ளது என்று விவசாய சங்க நிர்வாகிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.

நடப்பு சந்தை ஆண்டான அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரையில் நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு கோடியே 10 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்று விவசாய துறைக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமான, ‘அக்ரி வாட்ச்’ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி டன் அரிசி மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டது. அரிசி ஏற்றுமதியில் பாசுமதி அரிசியின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply