நறுமணப் பொருட்கள்

நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் நறுமண பொருள்கள் ஏற்றுமதி 11% உயர்வு

நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஏப்ரல் – ஜூலை) ஏலக்காய், மிளகாய், இஞ்சி, வெந்தயம் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருள்கள் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் ரூபாய் மதிப்பு அடிப்படையில் 11 சதவீதம் அதிகரித்து ரூ.3,893 கோடியிலிருந்து ரூ.4,339 கோடியாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பு அடிப்படையில் 6 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.மிளகாய், மஞ்சள்மிளகு, மிளகாய், மஞ்சள், நறுமண விதைகள் மற்றும் மதிப்புக்கூட்டிய நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதே ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என நறுமண பொருள்கள் வாரியம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 2.46 லட்சம் டன்னிலிருந்து 2.71 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, இந்திய நறுமண பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல தேவைப்பாடு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. “நடப்பு நிதி ஆண்டில் நறுமண பொருள்கள் ஏற்றுமதி வரலாறு காணாத அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் மதிப்பு கூட்டப்பட்ட நறுமண பொருள்களின் பங்கு மிக அதிகமாக இருக்கும்” என நறுமண பொருள்கள் வாரியத்தின் தலைவர் ஏ.ஜெயதிலக் தெரிவித்தார். புதினா, இஞ்சிநறுமண பொருள்கள் ஏற்றுமதி வருவாயில், மிளகாய் மற்றும் புதினாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நறுமண பொருள்களின் அரசன் என்றழைக்கப்படும் மிளகின் ஏற்றுமதி அளவு அடிப்படையில் 10 சதவீதம் அதிகரித்து 6,450 டன்னாக உயர்ந்துள்ளது. மதிப்பு அடிப்படையில் மிளகு ஏற்றுமதி ரூ.332 கோடியாக அதிகரித்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில் மிளகு ஏற்றுமதி முறையே ரூ.235 கோடி மற்றும் 5,870 டன்னாக இருந்தது.கடந்த சில ஆண்டுகளாக இஞ்சி ஏற்றுமதியின் வளர்ச்சி வேகம் குறைவாக இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் நான்கு மாதங்களில் இஞ்சி ஏற்றுமதி அளவு அடிப்படையில் 47 சதவீதம் அதிகரித்து 6,150 டன்னாகவும், மதிப்பு அடிப்படையில் 23 சதவீதம் உயர்ந்து ரூ.66 கோடியாகவும் உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.54 கோடி மதிப்பிற்கு 4,194 டன் இஞ்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.சர்வதேச சந்தையில் இந்திய நறுமண பொருள்களில் மிளகாய்க்கு அதிக தேவைப்பாடு இருந்து வருகிறது. மிளகாய் ஏற்றுமதி அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 6 மற்றும் 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில் ரூ.939 கோடி மதிப்பிற்கு 99 ஆயிரம் டன் மிளகாய் ஏற்றுமதியாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் 93,122 டன் மிளகாய் ரூ.851 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நறுமண எண்ணெய்நறுமண எண்ணெய் மற்றும் ஓலியோரெசின்கள் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் 3,975 டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.544 கோடியாகும். அமெரிக்காவும், சீனாவும் இந்திய நறுமண பொருள்கள் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. நடப்பு நிதி ஆண்டில் ரூ.12,305 கோடி மதிப்பிற்கு 7.55 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய நறுமணப் பொருள்கள் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதல் நான்கு மாதங்களில் இந்த இலக்கில் மதிப்பு மற்றும் அளவு அடிப்படையில் 36 மற்றும் 35 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. அன்னிய செலாவணிஅன்னியச் செலாவணி வருவாய் ஈட்டுவதில் நறுமணப் பொருள்கள் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வருவதில் நாட்டிற்கு உரிய பங்கினை அளிக்கவும் தரமான நறுமண பொருள்களை தயாரித்து வருவாயை அதிகரிக்க நறுமண பொருள்கள் வாரியம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply