ஏற்றுமதி செய்திகள்

நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை அடைய மத்திய அரசு தீவிர முயற்சி

நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை அடைய மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 2013–14–ஆம் நிதி ஆண்டில் 32,500 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் 5.7 சதவீதம் அதிகரித்து 25,700 கோடி டாலரை எட்டியுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்கை எட்டவேண்டுமானால் மீதமுள்ள இரண்டு மாதங்களில் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 32,600 கோடி டாலரை எட்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த போது தெரிவித்தார். இரண்டு மாதங்களில் ஏற்றுமதி இலக்கை எட்டுவது சவாலனதாகும். பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களின் கூட்டத்தை நடத்தி அடுத்த சில வாரங்களில் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக வர்த்தகதுறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்றுமதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு செலுத்தப்படும் இறக்குமதி வரி பாக்கியை தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு மத்திய வர்த்தக துறையிடம் கோரிக்கை வைத்துள்ளது. பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 37 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Leave a Reply