இரும்பு தாது & உலோகம்

நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதியை 3 மடங்கு உயர்த்த ஆர்.ஐ.என்.எல். இலக்கு

பொதுத் துறையைச் சேர்ந்த ஆர்.ஐ.என்.எல். நிறுவனம் 2014-15-ஆம் நிதி ஆண்டில் உருக்கு ஏற்றுமதியை மூன்று மடங்கு அதிகரித்து 3 லட்சம் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக ஆப்பிரிக்க சந்தையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘‘சென்ற 2013-14-ஆம் நிதி ஆண்டில் 1 லட்சம் டன் உருக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் டன் உருக்கு பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்’’ என இந்நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் டி.கே.சந்த் தெரிவித்தார்.

‘‘உற்பத்தி திறனை அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி அளவை அதிகரித்துள்ளோம். மேலும், விசாகபட்டினம் துறைமுகம் வாயிலாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சப்ளை செய்வது மிகவும் எளிதாக உள்ளது’’ என அவர் மேலும் கூறினார்.

இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற நிதி ஆண்டில் மதிப்பு அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ.750 கோடியாக இருந்தது. அதேசமயம், ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,527 கோடியாக இருந்தது.

Leave a Reply