நறுமணப் பொருட்கள்

நடப்பு நிதி ஆண்டில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி இலக்கை விஞ்ச வாய்ப்பு

நடப்பு நிதி ஆண்டில் 230 கோடி டாலருக்கு நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நறுமணப் பொருள்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது மற்றும் சர்வதேச சந்தையில் தேவைப்பாடு காணப்படுவது போன்ற காரணங்களால் இந்த இலக்கை விஞ்சி ஏற்றுமதி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2013 ஆகஸ்டு மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மதிப்பு அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 41 சதவீதம் அதிகரித்து ரூ.9,433 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் அளவு அடிப்படையில் 27 சதவீதம் அதிகரித்து 5.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் அளவு மற்றும் மதிப்பு அடிப்படையில் முறையே 4.50 லட்சம் டன் மற்றும் ரூ.6,696 கோடியாக இருந்தது என நறுமண பொருள்கள் வாரிய தலைவர் ஏ.ஜெயதிலக் தெரிவித்தார்.

மொத்த நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியில் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்படும் நறுமணப் பொருள்களின் பங்களிப்பு இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மண்டலத்தில் இம்முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் இதற்கான தேவைப்பாடு அதிகமாக உள்ளதால் இதற்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் நிதி ஆண்லும் (2014-15) 230 கோடி டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply