முந்திரி & பருப்பு வகைகள்

நடப்பு நிதி ஆண்டில் வரலாறு காணாத அளவிற்கு முந்திரி ஏற்றுமதி உயரும்

நடப்பு நிதி ஆண்டில் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல்-பிப்ரவரி) இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,624 கோடிக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி முழு ஆண்டில் (2012-13) ரூ.4,420 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் முந்திரி ஏற்றுமதி புதிய புதிய சாதனை அளவை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ரூபாயின் வெளிமதிப்பு

நடப்பு நிதி ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் வெளிமதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் முந்திரி ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் அளவு அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 12 சதவீதம் குறைந்து 7,009 டன்னாக சரிவடைந்த போதிலும் மதிப்பு அடிப்படையில் 6 சதவீதம் அதிகரித்து ரூ.315 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே நடப்பு நிதி ஆண்டில் முந்திரி ஏற்றுமதி ரூ.5,000 கோடியை எட்ட வாய்ப்புள்ளது.

தான்சானியா

முந்திரி ஏற்றுமதி அதிகரித்துள்ள அதே வேளையில் கச்சா முந்திரி இறக்குமதி 14 சதவீதம் சரிந்து 7.32 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தான்சானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா முந்திரி விலை அதிகரித்து வந்ததால் இறக்குமதி குறைந்தது. இதன் காரணமாக பதப்படுத்துதல் பணிகள் மந்தமடைந்தன. மேலும் ஏற்றுமதி அளவும் குறைந்தது என கைலாஷ் கேஷ்யூ எக்போர்ட்ஸ் உரிமையாளர் பி சோமராஜன் தெரிவித்தார்.

தற்போது உள்நாட்டில் சுமார் 7 லட்சம் டன் முந்திரி உற்பத்தியாகியுள்ளது. இது முந்திரி இறக்குமதி குறைந்ததால் ஏற்படும் பாதிப்பை ஓரளவு ஈடுகட்டும்.

ஆப்பிரிக்க நாடுகள்

கச்சா முந்திரி பாரம்பரியமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் அறுவடை தொடங்கி விட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து முந்திரி இறக்குமதி செய்யும் நாடுகள் விலையை குறைக்குமாறு இந்திய ஏற்றுமதியாளர்களை வலியுறுத்தி வருகின்றன.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply