சர்க்கரை

நடப்பு பருவத்தில் நிர்ணயித்த இலக்கை விட சர்க்கரை ஏற்றுமதி குறையும்?

நடப்பு பருவத்தில் (2013 அக்டோபர் – 2014 செப்டம்பர்) 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை விட சர்க்கரை ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 14 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஏற்றுமதி ஆர்டர்கள் வரத்து அநேகமாக நின்று விட்டது. உள்நாட்டில் சர்க்கரை விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் ஏற்றுமதியில் ஆர்வம் குறைந்துள்ளதே இதற்கு காரணமாகும்.

நீண்ட நாட்களாக சர்க்கரை விலை சரிவடைந்திருந்தது. மேலும் சர்வதேச சந்தையிலும் நல்ல விலை கிடைக்கவில்லை. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைமை இயக்குனர் அபினாஷ் வர்மா இது குறித்து கூறும்போது, ‘‘நடப்பு பருவத்தில் 18 லட்சம் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. எமது முந்தைய மதிப்பீடு 20 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த 15 தினங்களில் ஒரு ஏற்றுமதி ஆர்டரும் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

Leave a Reply