பொருள் வணிகம்

நடப்பு ரபி பருவத்தில் 1.15 கோடி டன் கோதுமை கொள்முதல்

நடப்பு ரபி பருவத்தில் சுமார் 1.15 கோடி டன் கோதுமை  கொள்முதல் செய்யப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வட  மாநிலங்களில் பருவ மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாததால்  கோதுமை சாகுபடி செய்வது தாமதமாக தொடங்கியது. இதனால்,  பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை அறுவடை  தாமதமாகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வரும் ஏப்ரல்  2வது வாரத்தில் அறுவடை தொடங்கியதும் சந்தைக்கு கோதுமை  வரத்து அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக இருக்கும்.

அப்போது, தனியார் மற்றும் இந்திய உணவுக் கழகமும் கொள்முதல்  பணியில் தீவிரம் காட்டும் என்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். நடப்பு ரபி பருவத்தில் சுமார் 1.15 கோடி டன் கோதுமை  கொள்முதல் செய்யப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ரபி பருவத்தில் 1.10 கோடி டன் கோதுமை கொள்முதல்  செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தினகரன்

Leave a Reply