இறக்குமதி செய்திகள்

நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டில் சோயா எண்ணெய் இறக்குமதி குறையும்

நடப்பு 2014-15-ஆம் நிதி ஆண்டில் சோயா எண்ணெய் இறக்குமதி குறையும் என தெரிகிறது. காலதாமதமாக ஆரம்பித்து, பின்னர் தீவிரமடைந்த பருவமழையால் சோயாபீன் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்தன.ஐந்தாவது இடம்உலக அளவில் சோயாபீன் உற்பத்தியில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. மழை குறைந்திருந்தாலும் நடப்பு 2014-15 வேளாண் பருவத்தில் சோயாபீன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நடப்பு நிதி ஆண்டில் உள்நாட்டில் சோயா எண்ணெய் சப்ளை 3 லட்சம் டன் அதிகரிக்கும் என கோட்டக் கமாடிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பையாஸ் உதானி கூறினார்.நம் நாட்டில் ஆண்டுக்கு 32 லட்சம் டன் சோயா எண்ணெய் நுகரப்படுகிறது. இதில் சரிபாதியளவு உள்நாட்டு உற்பத்தியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் திருமண மற்றும் பண்டிகை காலங்களில் எண்ணெய் பலகாரங்கள் செய்ய பாமாயிலுக்கு பதில் சோயா எண்ணெயையே பெரும்பாலும் உபயோகிக்கின்றனர். உலக அளவில் தாவர எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2013-14-ஆம் நிதி ஆண்டில் 1.1 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் பாதியளவு பாமாயிலாகும். பாமாயில் இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பிற சமையல் எண்ணெய் வகைகள் பக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டது.தேவைப்பாடுஇந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைப்பாடு ஆண்டுக்கு 1.80 கோடி டன்னாக உள்ளது. இந்த நிதி ஆண்டில் உள்நாட்டில், சோயா எண்ணெய் சப்ளை 19 லட்சம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இது 16 லட்சம் டன்னாக இருந்தது.

Leave a Reply