நறுமணப் பொருட்கள்வேளாண் பொருட்கள்

நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடியை எட்ட வாய்ப்பு!

நடப்பு நிதி ஆண்டில்  நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடியை எட்ட வாய்ப்புள்ளது. குறைந்தபட்சமாக ரூ.12,000 கோடிக்கும், அதிகபட்சமாக ரூ.15,000 கோடிக்கும் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியாகும் என வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நிதி ஆண்டில் (2012–13) ரூ.11,171 கோடி அளவிற்கு நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது  குறிpப்பிடத்தகது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் ரூ.8,377 கோடிக்கு 5.08 லட்சம் டன் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,732 கோடிக்கு 3.98 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது.  வெளிநாடுகளில் இந்திய சீரகம், புதினா தயாரிப்புகள் மற்றும் மிளகாய்க்கு தேவைப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம். மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

கணக்கீட்டு காலத்தில் சீரகம், புதினா ஏற்றுமதி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது. அடுத்தபடியாக மிளகாய் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா போராட்டம் காரணமாக செப்டம்பர் மாதம் வரை மிளகாய் ஏற்றுமதி மந்தமாக இருந்ததாக தெரிகிறது. சிரியாவில் ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் துருக்கி, சீனாவில் உற்பத்தி சரிவடைந்தது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் இந்தியாவின் சீரகம் சப்ளை அதிகரித்தது.

நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில் புதினா தயாரிப்புகள் அளவின் அடிப்படையில் 126 மடங்கு உயர்ந்துள்ளது. அதே சமயம் மதிப்பின் அடிப்படையில் 61 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்ததே இதன் பின்னணியாகும். மேலும் செயற்கை புதினா பொருள்களால் கடும் போட்டி உருவாகியுள்ளதாக தெரிகிறது. ஏப்ரல்–நவம்பர் காலத்தில் மிளகு, ஏலக்காய் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.

Leave a Reply