நறுமணப் பொருட்கள்

நறுமண பொருட்கள் ஏற்றுமதியில் முன்னேற்றம்

நடப்பு நிதியாண்டில் முதல் இருமாதங்களில், (ஏப்., – மே) நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 1,750 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மிளகாய் வற்றல்: இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை, (1,639 கோடி ரூபாய்) விட, 7 சதவீதம் அதிகம் என, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது. அதே சமயம், கணக்கீட்டு காலத்தில், அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, 11 சதவீதம் குறைத்து, 1.35 லட்சம் டன்னில் இருந்து, 1.19 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.

நம் நாட்டிற்கு, பல்வேறு இனங்களில், கடும் போட்டி நாடாக உள்ள சீனாவில், மிளகாய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நாடு, சர்வதேச சந்தைக்கு குறைந்த விலையில் மிளகாய் வற்றலை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனால் நம்நாட்டின் மிளகாய் வற்றலுக்கு, உலக நாடுகளில் தேவை குறைந்துள்ளது.

இதன் காரணமாகவே, நம் நாட்டின் நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கணக்கீட்டு காலத்தில், நாட்டின் மிளகாய் வற்றல் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 427 கோடி ரூபாயில் இருந்து, 359 கோடி ரூபாயாகவும், அளவின் அடிப்படையில், 55, 455 டன்னில் இருந்து 43,500 டன்னாகவும் சரிவடைந்துள்ளது.

சீரகம்: கணக்கீட்டு காலத்தில் புதினா ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 1,540 டன்னில் இருந்து, 200 டன்னாக சரிவடைந்துள்ளது. இருப்பினும் மதிப்பின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, அதிக மாற்றம் இன்றி, 306.91 கோடி ரூபாயாக (360.31 கோடி ரூபாய்) உள்ளது.சீரகம் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 15,111 டன்னிலிருந்து, 18,500 டன்னாகவும் இதன் மதிப்பு, 192 கோடி ரூபாயிலிருந்து, 238 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

ஏலக்காய்: மிளகு ஏற்றுமதியும், 2,426 டன்னிலிருந்து, 2,800 டன்னாகவும், 92.46 கோடி ரூபாயிலிருந்து, 114 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயம், மஞ்சள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 18,610 டன்னிலிருந்து 11,500 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 101 கோடி ரூபாயிலிருந்து, 96.67 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது. ஏலக்காய் ஏற்றுமதி அளவின் அடிப்படையில், 165 டன்னிலிருந்து, 330 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 14.38 கோடி ரூபாயிலிருந்து, 26.64 கோடி ரூபாயாகவும், வளர்ச்சி கண்டுள்ளது என, நறுமணப் பொருட்கள் வாரியத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply