மும்பை: நடப்பு 201415ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 3 லட்சம் கோடி ரூபாயை (5,000 கோடி டாலர்) எட்டும் என, மத்திய ஜவுளி துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்வார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:கடந்தாண்டில், 4,000 கோடி டாலர் மதிப்பிற்கு ஜவுளி ஏற்றுமதி மேற்கொண்டதையடுத்து, இந்திய ஜவுளி துறை நான்காவது இடத்திலிருந்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டில், அதிகளவு வேலைவாய்ப்புகளை வழங்குவதில், வேளாண் துறைக்கு அடுத்தபடியாக, இந்திய ஜவுளி துறை உள்ளது. எனவே, ஜவுளி துறையின் ஏற்றுமதியை ஊக்குவித்து, வேலை வாய்ப்புகளை மேலும் பெருக்கிட தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க, மத்திய அரசு, தயாராக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய ஜவுளி அமைச்சகம், நாடு தழுவிய அளவில், 2530 ஜவுளி பூங்காக்கள் மற்றும் பல்வேறு ஜவுளி நகரியங்களை அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, நடப்பாண்டில், ஜவுளி துறை ஏற்றுமதி, 5,000 கோடி டாலரை எட்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply