இறக்குமதி செய்திகள்

நிலக்­கரி இறக்­கு­மதி 1.52 கோடி டன்­னாக சரிவு

நாட்டின் நிலக்­கரி இறக்­கு­மதி, மூன்று மாதங்­க­ளுக்கு பின், சென்ற ஏப்ரல் மாதத்தில், 1.52 கோடி டன்­னாக சரி­வ­டைந்து உள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே மாதத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இறக்­கு­ம­தியை விட, 6 சத­வீதம் குறை­வாகும்.உருக்கு உற்­பத்தி:மின்­சாரம் மற்றும் உருக்கு உற்­பத்தி நிறுவ­னங்கள், பழைய கையி­ருப்பை பயன்­ப­டுத்­து­வதில் தீவிரம் காட்­டி­யதால், மதிப்பீட்டு மாதத்தில் நிலக்­கரி இறக்­கு­மதி குறைந்­துள்­ளது என, ஓர் டீம் என்ற ஆய்வு நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­திய மின் நிறு­வ­னங்கள், உற்­பத்தி திறனை அதி­க­ரித்­த­தாலும், சர்­வ­தேச சந்தையில் நிலக்­கரி விலை குறைந்­த­தாலும், கடந்த நிதி­யாண்டில், ஒரே ஒரு மாதத்தை தவிர்த்து, ஏனைய அனைத்து மாதங்­க­ளிலும், நிலக்­கரி இறக்­கு­மதி அதி­க­மாக இருந்­தது.மத்­திய சுரங்க அமைச்­ச­கத்தின் புள்­ளி­வி­வரத்­தின்­படி, கடந்த 2012-13ம் நிதி­ஆண்டில், நாட்டின் நிலக்­கரி உற்­பத்தி, 55.78 கோடி டன்­னாக இருந்­தது.சென்ற 2013-14ம் நிதி­யாண்டின் முதல் 11 மாதங்­களில் (ஏப்.,-பிப்.,), நிலக்­கரி உற்­பத்தி, 49.72 கோடி டன்­னாக இருந்­தது.
உற்பத்தி:அதே­ச­மயம், இவ்­வாண்டில், 15.88 கோடி டன் நிலக்­கரி இறக்­கு­மதி செய்­யப்­பட்­டு உள்­ளது.உள்­நாட்டில், மொத்த நிலக்­கரி உற்பத்தி யில், கோல் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு மட்டும், 80 சத­வீதம் அள­விற்கு உள்­ளது. சர்­வ­தேச அளவில், நிலக்­கரி இறக்­கு­ம­தியில், இந்­தியா மூன்­றா­வது இடத்தில் உள்­ளது.குறிப்­பாக, இந்­தோ­னே­ஷியா, ஆஸ்­தி­ரே­லியா, தென்­ஆப்­ரிக்கா மற்றும் அமெ­ரிக்­கா­வி­ல்­ இருந்து, அதி­க­ளவில் நிலக்­கரி இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

Click Here

Leave a Reply