இறக்குமதி செய்திகள்

நிலக்கரிக்காக இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்

இலக்கைக் காட்டிலும் உற்பத்தி குறைந்துள்ளதால் நிலக்கரிக்காக இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக ஏழு முக்கிய சுரங்கங்களில் இருந்து 4.20 கோடி டன் அளவிற்கு நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனியாருக்கான சுரங்க ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே நடப்பு ஐந்தாண்டு (2012-17) திட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட எட்டு சதவீத உற்பத்தி வளர்ச்சியை எட்ட இயலாது. 2016-17-ஆம் நிதி ஆண்டுக்குள் 79.50 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயத்துள்ளது. சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் ரெயில் போக்குவரத்து போன்ற காரணங்களால் இலக்கை எட்டுவது கடினம் என தெரிகிறது.

நிலக்கரி உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருவதால் இறக்குமதியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிக விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதால் சில நிறுவனங்கள் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளன.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply