பொருள் வணிகம்

பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்

நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தியை கொண்டதாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி குஜராத் மாநிலத்தில் பருத்தி உற்பத்தி அதிகபட்சமாக 1.25 கோடி பொதிகளாக இருக்கும். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 85 லட்சம் பொதிகளாக இருக்கும். தெலுங்கானாவில் 45 லட்சம் பொதிகளும், கர்நாடகா மாநிலத்தில் 36 லட்சம் பொதிகளும், சீமாந்திராவில் 25 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும். அரியானாவில் 24 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யப்படும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய பருவம் தொடங்கியது முதல் பருத்தி விலை குறைந்து வந்தது. சீசன் காரணமாக தேவைப்பாடு உயர்வு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்தது போன்ற காரணங்களால் கடந்த மூன்று தினங்களாக விலை உயர்ந்துள்ளது என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.பருத்தி ஏற்றுமதி பொதுவாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விறுவிறுப்பாக நடைபெறும். அந்த மாதங்களில் சீனா, வங்காளதேசம், வியட்நாம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதானமாக பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Leave a Reply