பருத்தி பஞ்சு & நூல்

பருத்தி ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு

70 லட்சம் பொதிகளுக்கு (1 பொதி–170 கிலோ) அதிகமாக பருத்தி ஏற்றுமதி செய்தால்,அதற்கு 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவராவ் தெரி வித்தார்.

நூற்பாலைகள்:திருப்பூர் பின்னலாடை ஜவுளித் துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:நடப்பாண்டு, 370 லட்சம் பருத்தி பொதிகள் உற்பத்தியாகும் என கணக்கிடப் பட்டுள் ளது. நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளுக்கு, 280 லட்சம் பொதிகள் தேவைப்படும் என, மதிப்பிடப் பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு,70 லட்சம் பருத்தி பொதிகள் போக,உபரியாக,19 லட்சத்திற்கும் மேற்பட்ட பருத்தி பொதிகள் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் பருத்தி விலை சீராக இருக்க, 70 லட்சம் பருத்தி பொதிகளுக்கு மேல் செய்யப்படும் ஏற்றுமதிக்கு, 10 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், பருத்தி நூலிழை விலையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தற்போது ஹெக்டேருக்கு, 550 கிலோ பருத்தி உற்பத்தியாகிறது. பருத்தி உற்பத்தி குறித்த ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதி ஒதுக்குவதன் மூலம், இந்த உற்பத்தி நான்கு மடங்கு உயர்ந்து, பருத்திக்கான தேவை பூர்த்தியாகிவிடும்.

ஐந்தாண்டு திட்டம்: தொழில்துறை மேம்பாட்டுக்காக, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், டப் திட்டத்தின் கீழ், 904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்நிதியை பயன்படுத்தி,தொழில் துறையினர் தங்கள் நிறுவ னங்களை மேம்படுத்தி, ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, சாம்பசிவ ராவ் கூறினார்.

ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் கூறுகையில், “நூற்பாலைகள், பருத்தி நூலிழை விலையை உயர்த்துவதால், திருப் பூர் பின்னலாடை துறை மட்டுமின்றி,அதை சார்ந்துள்ள தொழில்களும் பாதிக்கப்படுகின்றன. இந்திய பருத்திக் கழகம், கொள்முதல் செய்யும் பருத்தியை, இடைத்தரகர்களுக்கு வழங்காமல், தொழில் துறையினருக்கு மட்டுமே விற்க வேண்டும்” என்றார்.

Leave a Reply