பருத்தி பஞ்சு & நூல்

பருத்தி ஏற்­று­மதி சரி­வ­டையும்:சீனாவில் தேவை குறைந்­த­து

சீனாவில் தேவை குறைந்­துள்­ளதால், வரும் 2014 – 15ம் பரு­வத்தில் (அக்.–செப்.,), நாட்டின் பருத்தி ஏற்­று­மதி, 60 – 70 லட்சம் பொதி­க­ளாக சரி­வ­டையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
நடப்பு 2013 – 14ம் பரு­வத்தில் (அக்.,–செப்.,), பருத்தி ஏற்­று­மதி, 1.10 கோடி பொதி­களை (ஒரு பொதி=170 கிலோ) எட்டும் என, கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.சீனா­விற்கு பருத்­தியை அதி­க­ளவில் ஏற்­று­மதி செய்­வதில் இந்­தியா முத­லி­டத்தில் உள்­ளது. நடப்பு பரு­வத்தில் மட்டும், சீனா­விற்­கான பருத்தி ஏற்­று­மதி, 99 லட்சம் பொதி­களை எட்­டி­யுள்­ளது.
இந்­நி­லையில், கையி­ருப்பு அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்து, பருத்தி கொள்­மு­த­லுக்கு புதிய கொள்­கையை சீனா வகுத்­துள்­ளது. இதன் கார­ண­மாக, வரும் பரு­வத்தில், பருத்தி ஏற்­று­மதி குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு குறைய வாய்ப்­புள்­ளது என, வட இந்­திய ஜவுளி ஆலைகள் கூட்­ட­மைப்பின் துணைத் தலைவர் சஞ்சய் கே.ஜெயின் தெரி­வித்­துள்ளார்.குறைந்த விலை கருவி: பருத்தி எடுப்­ப­தற்­கான குறைந்த விலை கரு­வியை, தென்­னிந்­திய ஆலைகள் கூட்­ட­மைப்பு (சைமா) வடி­வ­மைத்­துள்­ளது.
இது­கு­றித்து, ‘சைமா’ வின் தலைவர் ராஜ்­குமார் கூறி­ய­தா­வது:பருத்தி எடுப்­ப­தற்­காக பிரத்­யே­க­மாக வடி­வ­மைக்­கப்­பட்ட கருவி, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக, பல்­வேறு கட்ட சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. இந்­நி­லையில், வணிக ரீதியில் அறி­மு­கப்­ப­டுத்த தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.சூரி­யமின் சக்தி மற்றும் பேட்­ட­ரியில் இயங்­கக்­கூ­டிய இப்­பு­திய கரு­வியின் மூலம், 1 மணி நேரத்தில், 10 கிலோ பருத்தி எடுக்க முடியும். அதே­ச­மயம், இதே அளவு பருத்­தியை கையினால் பறிக்க, எட்டு மணி நேரம் தேவைப்­படும்.இப்­பு­திய கரு­வியின் விலை, 20 ஆயிரம் ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.இவ்­வாறு, அவர் கூறினார்.

Leave a Reply