பருத்தி பஞ்சு & நூல்

பருத்தி நுாலிழை ஏற்­று­மதி13.50 கோடி கிலோ

2013-14ம் நிதி­யாண்டில்,இந்­தியா, 470 கோடி டாலர் மதிப்­பி­லான, 13.50 கோடி கிலோ பருத்தி நுாலி­ழையை ஏற்­று­மதி செய்­தி­ருக்கும் என, பருத்தி ஜவு­ளிகள் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்பு (டெக்ஸ்ப்­ரோசில்) தெரி­வித்­துள்­ளது.வழக்­க­மாக, ஏப்ரல் மாதத்தில் பருத்தி நுாலிழை ஏற்­று­ம­தியில் ஏற்ற, இறக்கம் காணப்­படும். இத்தகைய சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு போன்ற இடர்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும், பருத்தி நுாலிழை ஏற்­று­மதி, நிர்­ண­யித்த இலக்கை எட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.சென்ற நிதி­யாண்டில், ஏப்., -ஜன­வரி வரையிலான 10 மாதங்­களில், இந்­தியா, 375 கோடி டாலர் மதிப்பிலான, 108.20 கோடி கிலோ பருத்தி நுாலிழையை ஏற்­று­மதி செய்­துள்­ளது என,டெக்ஸ்ப்­ரோசில் வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply