முந்திரி & பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு

மத்திய அரசு பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது. எனினும் ‘காபுலி’ என்ற உயர்தர கொண்டைக்கடலை, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகள் மற்றும் துவரம் பருப்பு (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பருப்பு நுகரப்படுகிறது. அதே சமயம் உற்பத்தி ஏறக்குறைய 1.80 கோடி டன் அளவிற்கே உள்ளது. எனவே உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பருப்பு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக ஆஸ்திரேலியா, கனடா, மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து பருப்பு இறக்குமதியாகிறது.

உள்நாட்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு 2006 ஜூன் மாதத்தில் முதல் முறையாக பருப்பு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சப்ளை குறைந்து பருப்பு வகைகளின் விலை கடுமையாக உயர்ந்து விடும். எனவே பருப்பு ஏற்றுமதி மீதான தடை ஆண்டுதோறும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply