பொருள் வணிகம்

பாசி பருப்பு வரத்து அதி­க­ரிப்பு குவிண்­டா­லுக்கு ரூ.600 விலை சரிவு

வட­மா­நி­லங்­களில் தமி­ழ­கத்­துக்கு விற்­ப­னைக்கு வரும் பாசிப் பருப்பு, பயிறு ஆகி­ய­வற்றின் வரத்து அதி­க­ரித்­ததை அடுத்து, அவற்றின் விலை குவிண்­டா­லுக்கு, 600 ரூபாய் வரை சரிந்­துள்­ளது.தமி­ழ­கத்­துக்

கு தேவையை பாசி பருப்பு, பயிறு வகைகள், மகா­ராஷ்­டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­களும், கர்­நா­டகா, ஆந்­திரா உள்­ளிட்ட தென் மாநி­லங்­களில் இருந்து விற்­ப­னைக்கு வரு­கின்­றன.வட­மா­நி­லங்­களில் நடப்­பாண்டு அறு­வ­டையில் தாமதம் ஏற்­பட்­டுள்ளதால், தமி­ழ­கத்­துக்­கான பருப்பு வரத்து ஜன­வரி கடைசி வாரத்தில் முற்றிலும் இல்லை. இதை அறிந்த பெரிய வியா­பா­ரிகள் அவற்றை பதுக்­கி­யதால், அவற்றின் விலை கடும் உயர்வு ஏற்பட்டது. தற்போது அறு­வ­டையில் ஏற்­பட்ட சுறு­சு­றுப்பால், பாசி பயிறு, பருப்பு தமி­ழ­கத்­துக்கு விற்­ப­னைக்கு வர துவங்கி உள்­ளது. சென்னை, சேலம் லீபஜார், விரு­து ­நகர் ஆகிய இடங்­க­ளுக்கு பாசி பயிறு, பருப்பு வரத்து அதி­க­ரித்­ததால், அவற்றின் விலை சரி­யத்­து­வங்கி உள்­ளது.
கடந்த வாரம், பாசிப்­ப­ருப்பு முதல் ரகம் குவிண்டால், 10,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 10,600 ரூபா­யா­கவும், பாசி பயிறு குவிண்டால், 10,200 ரூபா­யாக விற்­பனை செய்­யப்­பட்­டது. குவிண்­டா­லுக்கு, 600 ரூபாய் வரை சரிவு ஏற்­பட்டு, முதல் ரகம் பாசி பருப்பு குவிண்டால், 10,300 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 9,900 ரூபாய்க்கும், பாசி பயிறு குவிண்டால், 9,500 ரூபா­யாக குறைந்­துள்­ளது.

Leave a Reply