அரிசி & சிறுதானியங்கள்

பாசுமதி ஏற்றுமதியை அதிகரிக்க பஞ்சாப் முதல்வர் நடவடிக்கை

பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்ட 7 அல்லது 8 கிராமங்களை ஒரு தொகுப்பாக உருவாக்கி அந்த கிராமங்களை தத்து எடுத்து தரமான பாசுமதி நெல் விதகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பஞ்சாப் அரிசி ஏற்றுமதி சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பாதல் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது அவர் மேலும் கூறுகையில், ‘மாநிலத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் பாசுமதி ரகத்தை மேம்படுத்த வேண்டும். இந்த பணியில் மாநில வேளாண்துறை இணைந்து செயல்பட வேண்டும். தரமான பாசுமதி உற்பத்தியின் மூலமே ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். ஐரோப்பிய நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்வது தொடர்பான பிரச்னையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.

 

Leave a Reply