ஜவுளி & ஆயத்த ஆடைகள்

பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியாக உயரும்

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உயரும் என்று இந்திய தொழிலக (சிஐஐ) கூட்டமைப்பின் தமிழக தலைவர் ரவிசாம் தெரிவித்தார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ‘கிளஸ்டர்’ என்ற ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தொடக்க விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. திருப்பூரைச் சேர்ந்த 13 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இணைந்து இந்த மையத்தை ஏற்படுத்தியுள்ளன.

விழாவில், ரவிசாம் பேசியது:

13 நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘கிளஸ்டர்’ அமைப்பை ஏற்படுத்தி யுள்ளன.

ஒவ்வொரு நிறுவனத்தின் பிழைகள், குறைகள், சிறப்பு தொழில்நுட்பக் குறிப்புகள், அதை மேம்படுத்துவதற்கான ஆலோ சனைகள் உள்ளிட்ட அனைத்துவித கருத்துகளையும் ஒருவர் மற்றொரு வருடன் பகிர்ந்து கொள்ள, இந்த மையம் உதவியாக இருக்கும்.

திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி ரூ.18 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய தொழில் வளர்ச்சியிலும், தமிழக தொழில் வளர்ச்சியிலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் முக்கியக் காரணமாக விளங்கும் என்றார்.

Leave a Reply