புண்ணாக்கு & தீவனங்கள்

பிப்ரவரியில் புண்ணாக்கு ஏற்றுமதி 53 சதவீதம் குறைந்தது

பிப்ரவரியில் புண்ணாக்கு ஏற்றுமதி 53 சதவீதம் சரிவடைந்து 3.07 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. லத்தீன் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் புண்ணாக்கு விலை அதிகமாக உள்ளதே இதற்கு காரணமாகும்.

ஆசியா கண்டத்தில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிப்ரவரியில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் குறைந்து 1.84 லட்சம் டன்னாக உள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஏற்றுமதி 49.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிகிறது. சோயாபீன் உற்பத்தியில் மத்தியபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன.

கடுகு, பருத்தி விதை, எள் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தென்கிழக்கு ஆசிய நாடுகள் நம் நாட்டிலிருந்து புண்ணாக்கை அதிகம் இறக்குமதி செய்கின்றன. புண்ணாக்கு ஏற்றுமதியை பொறுத்தவரை தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் நமது முக்கிய சந்தைகளாக உள்ளன என்றாலும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற மேலை நாடுகளுக்கும் கூட புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த நிதி ஆண்டில் (2012~13) ஒட்டுமொத்த அளவில் புண்ணாக்கு ஏற்றுமதி 14.3 சதவீதம் குறைந்து 48 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது. இந்திய புண்ணாக்கில் ஆபத்தான ரசாயனம் உள்ளது என புகார் கூறி, சீனா தடை விதித்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.

நன்றி தினத்தந்தி

Leave a Reply