இறக்குமதி செய்திகள்

பிப்ரவரி மாதத்தில் இயற்கை ரப்பர் இறக்குமதி 2 மடங்கு உயர்ந்தது

இயற்கை ரப்பர் இறக்குமதி பிப்ரவரி மாதத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 18,141 டன்னாக உயர்ந்துள்ளது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் இயற்கை ரப்பர் விலை குறைந்து காணப்பட்டதால் டயர் உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் இறக்குமதி செய்தன.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது மற்றும் அந்நாட்டின் இயற்கை ரப்பர் கையிருப்பு அதிகளவில் இருந்தது போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் விலை குறைந்தது. இதனை இந்திய டயர் தயாரிப்பு நிறுவனங்கள் வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளன.

பிப்ரவரி மாதத்தில் இயற்கை ரப்பர் உற்பத்தி 60 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 62 ஆயிரம் டன்னாக இருந்தது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. எனினும் உள்நாட்டில் தேவை அதிகமாக உள்ளதால் இறக்குமதியும் அதிகமாக உள்ளது. பொதுவாக மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply