இறக்குமதி செய்திகள்

பிப்ரவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதி 27 சதவீதம் குறைந்தது

சர்வதேச சந்தையில் அதிக விலை மற்றும் உள்நாட்டில் கடுகு எண்ணெய் சப்ளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பால் பிப்ரவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதி 27 சதவீதம் குறைந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 4.04 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2011 ஏப்ரல் மாதத்தில் 3.50 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

பிப்ரவரி மாத பாமாயில் இறக்குமதியில், கச்சா பாமாயில் இறக்குமதி 20.4 சதவீதம் குறைந்து 2.69 லட்சம் டன்னாகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி 40 சதவீதம் சரிந்து 1.25 லட்சம் டன்னாகவும் குறைந்துள்ளது.

பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தோனேஷியா சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதிக்கான வரியை மாற்றி அமைத்தது. இதன் காரணமாக இந்தியாவின் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பாமாயில் இறக்குமதி குறைந்துள்ளது.

நம்நாட்டின் மொத்த தாவர எண்ணெய் தேவைப்பாட்டில் 60 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியா ஆண்டுக்கு 1.80 கோடி டன் தாவர எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதில் பாமாயில் பங்கு 80 சதவீதமாகும். மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. தென் அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

 

நன்றி தினத்தந்தி

Leave a Reply