இறக்குமதி செய்திகள்

பிளாட்டினம் இறக்குமதி அதிகரிப்பு

இந்தியாவில் தற்போது, பிளாட்டினம் ஆபரணம் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இதை உறுதிபடுத்தும் வகையில் பிளாட்டினம் இறக்குமதியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த மாதம் வெளிநாடுகளில் இருந்து 1.60 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு பிளாட்டினம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 0.39 மில்லியன் டாலர் அளவிற்கே இறக்குமதியானது. இந்த தகவலை ஜெம்ஸ் அண்டு ஜூவல்லரி எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply