புண்ணாக்கு & தீவனங்கள்

புண்ணாக்கு ஏற்றுமதி 20% உயர்வு

ஏப்ரல் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 20 சதவீதம் உயர்ந்து 2 லட்சத்து 36 ஆயிரத்து 835 டன்னை எட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 554 டன்னாக இருந்தது.

ஈரான்

இதே மாதத்தில் கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி 54 ஆயிரத்து 77 டன்னிலிருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 872 டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 99 ஆயிரத்து 451 டன்னிலிருந்து 89 ஆயிரத்து 883 டன்னாக குறைந்துள்ளது. ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதி 32 ஆயிரத்து 640 டன்னிலிருந்து 20 ஆயிரத்து 378 டன்னாக குறைந்துள்ளது.

தவிட்டு புண்ணாக்கு ஏற்றுமதி 11 ஆயிரத்து 255 டன்னிலிருந்து 600 டன்னாக குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக ஈரானுக்கு 57 ஆயிரத்து 780 டன்னும், தென் கொரியாவுக்கு 52 ஆயிரத்து 151 டன்னும், தாய்லாந்துக்கு 42 ஆயிரத்து 550 டன்னும் புண்ணாக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது.

கடுகு, பருத்தி விதை, எள் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக தென்கொரியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன.

தென்கிழக்கு ஆசியா

புண்ணாக்கு ஏற்றுமதியை பொறுத்தவரை தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் நமது முக்கிய சந்தைகளாக உள்ளன என்றாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிறமேலை நாடுகளுக்கும் கூட புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Leave a Reply