புண்ணாக்கு & தீவனங்கள்

புண்ணாக்கு ஏற்றுமதி 32 சதவீதம் குறைந்தது

கடந்த எண்ணெய் பருவத்தில் (2013 நவம்பர்-2014 அக்டோபர்) புண்ணாக்கு ஏற்றுமதி 32 சதவீதம் சரிவடைந்து 34.86 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பெரிதும் குறைந்ததே இதற்கு காரணம் என இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடுகு, பருத்தி விதை, எள் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளை நிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

முந்தைய 2012-2013 எண்ணெய் பருவத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 51.29 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த ஆறு மாதங்களாகவே சோயா புண்ணாக்கு ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. கடந்த பருவத்தில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 49 சதவீதம் குறைந்து 36.23 லட்சம் டன்னிலிருந்து 18.65 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.

தென் கொரியா, வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் பொதுவாக இந்தியாவிடம் புண்ணாக்கை அதிகம் வாங்குகின்றன. புண்ணாக்கு ஏற்றுமதியை பொறுத்தவரை தென்கிழக்கு ஆசிய நாடுகள்தான் நமது முக்கிய சந்தைகளாக உள்ளன. என்றாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற மேலை நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Leave a Reply