ஏற்றுமதி செய்திகள்

புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு ஆதரவு

புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் மத்திய அரசு தகுந்த ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

விரிவான அறிக்கைஇது குறித்து சியாம் அமைப்பின் துணை பொது செயலாளர் சுகாதோ சென் கூறும்போது, “வாகன நிறுவனங்கள் புதிய சந்தைகளில் களம் இறங்க மத்திய அரசு உதவ வேண்டும். இதற்காக மத்திய அரசுடன் கலந்தாலோசித்து வருகிறோம். வர்த்தக அமைச்சகத்திடம் விரிவான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளோம். வர்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ள நாடுகள் பற்றி அதில் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது-அல்ஜீரியா, இலங்கை போன்ற நாடுகளில் இறக்குமதி கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதாலும், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாலும் நடப்பாண்டு ஏப்ரல் – அக்டோபர் மாத காலத்தில் பயணிகள் கார் ஏற்றுமதி 7 சதவீதம் சரிவடைந்து 3.12 லட்சமாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் 3.35 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் ஏற்றுமதி ஆகியிருந்தன.

2004-05-ஆம் நிதி ஆண்டில் கார் ஏற்றுமதியில் ஐரோப்பாவின் பங்கு 38 சதவீதமாக இருந்தது. கடந்த நிதி ஆண்டில் (2013-14) இது 17 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அதுபோல் இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் பங்கு 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பங்களிப்பு, இதே காலத்தில், 7 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் பங்கு 16 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. தாராள வர்த்தக ஒப்பந்தம்பாரம்பரிய ஏற்றுமதி சந்தைகள் உடனான வர்த்தகம் திருப்திகரமாக இல்லை. எனவே புதிய சந்தைகளில் கவனம் செலுத்த இதுவே உகந்த நேரம். இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் ஆதரவு தேவைப்படுகிறது.

சிலி, பெரு, கொலம்பியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு சந்தைகளில் களம் இறங்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும். ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான சிலியுடன் நாம் இதுவரை தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு சென் கூறினார்.

Leave a Reply