தொழில்நுட்ப செய்திகள்

பேஸ்புக் வளர்ச்சியால் கூகுளின் விளம்பர வருவாய் பாதிக்கும்

உலக அளவில் மொபைல் மூலமான விளம்பரங்களில் கடந்த 2013ம்  ஆண்டில் 66 சதவீதத்துக்கும் மேல் பேஸ்புக் மற்றும் கூகுள் மூலம்  செய்யப்பட்டுள்ளது. இதில் கூகுளின் பங்கு கடந்த ஆண்டில் 50 சதவீதமாக  இருந்தது. நடப்பு ஆண்டில் இது 46.8 சதவீதமாக குறைந்துள்ளது. கூகுள் மூலமான  விளம்பரங்களில் கணிசமான அளவு பேஸ்புக்கிற்கு சென்றுவிட்டதே இதற்கு  காரணம் என இதுகுறித்து ஆய்வு நடத்திய இ-மார்க்கெட்டர் நிறுவனம்  தெரிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரித்து கூகுளை  மிஞ்சிவிடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினகரன்

Leave a Reply