வர்த்தகக் கண்காட்சி & சந்தை

போலந்து நாட்டில் நடைபெறும் தொழில்நுட்ப கண்காட்சியால் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்பு

போலந்து நாட்டின் போஸ்னான் நகரத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தொழில்நுட்ப கண்காட்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி நமது ஏற்றுமதியாளர்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதுடன், ஐரோப்பிய சந்தைக்கான ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் என்று பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. போலந்து நாட்டில் நடைபெறும்கண்காட்சியை இந்த அமைப்புதான் நடத்துகிறது. இதில் இந்தியாவின் 125 உயர்தொழில்நுட்ப பொறியியல் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

நாட்டின் மொத்த சரக்குகள் வர்த்தகம் (ஏற்றுமதி + இறக்குமதி) 80,000 கோடி டாலர் அளவிற்கு உள்ளது. இதில் போலந்து நாட்டுடனான வர்த்தகம் 200 கோடி டாலர் அளவிற்கே உள்ளது. இந்த நிலையில் இது போன்ற கண்காட்சிகள் பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தொழில்துறையில் பொறியியல் சாதனங்களின் பங்களிப்பு 27 சதவீதமாக உள்ளது. அதே சமயம் மொத்த வெளிநாட்டு கூட்டுத்திட்டங்களில் இத்துறையின் பங்கு 63 சதவீதமாக உள்ளது என பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply