ஏற்றுமதி செய்திகள்செய்திகள்

போலிப்பொருட்கள் ஏற்றுமதி : சீனா முதலிடம், இந்தியா ஐந்தாம் இடம்.

Tamil Export News

போலிப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் சீனா இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஒஇசிடி) நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. சீனாவைத் தொடர்ந்து துருக்கி, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சர்வதேச அளவில் கைப்பற்றப் பட்டிருக்கும் போலிப்பொருள் களில் 63 சதவீதம் சீனாவில் இருந்தே ஏற்றுமதி ஆகி இருக்கின்றன. துருக்கி இரண்டாம் இடத்தில் இருந்தாலும் கைப்பற்றப்பட்ட போலிபொருட்களில் 3.3 சதவீதம் மட்டுமே துருக்கியில் இருந்து ஏற்றுமதி ஆகியுள்ளன. சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் பங்கு முறையே 1.9 சதவீதம், 1.6 சதவீதம் மற்றும் 1.2 சதவீதமாகும்.

இதுபோன்ற போலிப்பொருட் களால் அதிகம் பாதிக்கபடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஏற்றுமதி ஆகும் போலிப்பொருட்களின் மதிப்பு சுமார் 46,100 கோடி டாலர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது சர்வதேச மொத்த ஏற்றுமதியில் 2.5 சதவீதமாகும். 2013-ம் ஆண்டு சர்வதேச இறக்குமதி 17.9 லட்சம் கோடி டாலர் ஆகும். 2013-ம் ஆண்டு வரையிலான தகவல்களை அடிப்படையாக வைத்து ஓஇசிடி அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 5 சதவீதம் போலியானவை. இவை பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து வருபவையாக இருக்கிறது, குறிப்பாக சீனாவில் இருந்து இந்த பொருட்கள் ஏற்றுமதியாகின்றன என்று ஓஇசிடி தெரிவித்திருக்கிறது.

கைப்பை, வாசனை திரவியம், மெஷின், வேதிப்பொருள், காலணி உள்ளிட்ட பல பொருட்களில் போலி கள் தயாரிக்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் வாழ்க்கையை பாதிக்கும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள் என பல வகையான பொருட்களிலும் போலிகள் உள்ளன.

தபால் பார்சல் மூலமாகவே பெரும்பாலான போலிப்பொருட் கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கைப்பற்றப்படும் போலிப்பொருகளில் 62 சதவீதம் பார்சல்கள் மூலமாக நடக்கின்றன.