வேளாண் பொருட்கள்

மக்­காச்­சோளம் ஏற்­று­மதி15 சத­வீதம் சரி­வ­டையும்

உலக நாடு­களின் போட்­டியால், நடப்பு நிதி­யாண்டில், மக்­காச்­சோளம் ஏற்­று­மதி, 15 சத­வீதம் சரி­வ­டையும் என, வேளாண் மற்றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவுப் பொருட்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு ஆணையம் (அபெடா) தெரி­வித்­துள்­ளது.உள்­நாட்டில், நடப்பு நிதி­யாண்டில், மக்­காச்­சோளம் சாகு­படி பரப்பு, 1 கோடி ஹெக்­டே­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற நிதி­யாண்டில், 87 லட்சம் ஹெக்­டே­ராக இருந்­தது.இதே போன்று, இதன் உற்­பத்­தியும், 2.18 கோடி டன்­னி­லி­ருந்து, 2.30 கோடி டன்­னாக உயரும் என, கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில், அர்­ஜென்­டினா மற்றும் பிரேசில் நாடுகள், தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளுக்கு, குறைந்த விலையில் மக்­காச்­சோ­ளத்தை ஏற்­று­மதி செய்து வரு­கின்­றன.இதை­ய­டுத்து, நம்­நாடு, சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் வரையில், 30 லட்சம் டன் அள­விற்கே, மக்­காச்­சோ­ளத்தை ஏற்­று­மதி செய்­துள்­ளது. எஞ்­சி­யுள்ள நிதி­யாண்டின் இறு­திக்குள், மேலும், 10 லட்சம் டன் மக்­காச்­சோளம் ஏற்­று­மதி செய்­யவே வாய்ப்­புள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டில் மேற்­கொள்­ளப்­பட்ட ஏற்­று­ம­தியை (47.80 லட்சம் டன்) விட, 15 சத­வீதம் குறை­வாகும் என, ‘அபெடா’ தெரி­வித்­துள்­ளது.
இது­கு­றித்து, இத்­து­றையை சேர்ந்த ஆய்­வாளர் ஒருவர் கூறு­கையில், ‘நம்­நாட்டின் மக்­காச்­சோளம் ஏற்­று­மதி விலைக்கும், அர்­ஜென்­டினா, பிரேசில் உள்­ளிட்ட நாடு­களின் ஏற்­று­மதி விலைக்கும், 5 முதல் 7 சத­வீதம் வரை வேறு­பாடு உள்­ளது’ என்று தெரி­வித்தார்.–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து.

Leave a Reply