பொருள் வணிகம்

மஞ்சளுக்கு கூடுதல் விலை

மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.600 வரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 29ம் தேதி நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் ரூ.6,051க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.5,515க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று  நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக விரலி மஞ்சள் ரூ.6,689க்கும், குறைந்தபட்சமாக ரூ.6,143க்கும் விற்கப்பட்டது. கிழங்கு மஞ்சள் அதிகபட்சம் ரூ.6,143க்கும், குறைந்தபட்சம் ரூ.5,764க்கும் விற்பனையானது.  செம்மாம்பாளையம் மார்க்கட்டில் நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் விரலி அதிகபட்சமாக ரூ.6,669க்கும், குறைந்தபட்சம் ரூ.3,399க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக ரூ.6,039க்கும், குறைந்தபட்சம் ரூ.3,219க்கும் விற்கப்பட்டது. கடந்த மாதம் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக ரூ.6,051க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று குவிண்டால் ஒன்றுக்கு ரூ.600 வரை விலை உயர்ந்து ரூ.6,689க்கு விற்றது. தீபாவளிக்கு தேவை அதிகரித்துள்ளதால் மஞ்சளுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments (1)

  1. Good information. I expecting more information from your side

Leave a Reply