இறக்குமதி செய்திகள்

மத்திய அரசு அறிவிப்பு தங்கத்தின் இறக்குமதி மதிப்பு அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு 10 கிராமுக்கு 445  அமெரிக்க டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளியின் விலையை சர்வதேச சந்தை  நிலவரம் மற்றும் அன்னிய செலாவணியின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப  மத்திய அரசு மாற்றி வருகிறது. இதன் அடிப்படையில்தான் சுங்கவரி  விதிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதியாகும் தங்கத்தின் மதிப்பை 10  கிராமுக்கு 445 அமெரிக்க டாலராக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.  வெள்ளி ஒரு கிலோவுக்கு 694 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் இறக்குமதி மதிப்பு 10 கிராமுக்கு 433 அமெரிக்க  டாலராகவும், வெள்ளி கிலோவுக்கு 699 அமெரிக்க டாலராகவும் இருந்தது.  இறக்குமதியில் பெட்ரோலியத்துக்கு அடுத்து 2வது இடத்தில் தங்கம்  உள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு தங்கம்  இறக்குமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தங்கம் இறக்குமதியில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த  நிதியாண்டில் 845 டன்னாக இருந்த தங்கம் இறக்குமதி, நடப்பு  நிதியாண்டில் 550 டன்னாக குறைய வாய்ப்பு உள்ளதாக நகை  வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

நன்றி தினகரன்

 

Leave a Reply