வணிகச் செய்திகள்

மருந்­து­களில் ‘பார்­கோடு’அம­லா­வது தள்­ளி­வைப்பு

புது­டில்லி:மருந்து நிறு­வ­னங்­களின் தயா­ரிப்­பு­களில், ‘பார்­கோடு’ தொழில்­நுட்பம் இடம் பெறு­வ­தற்­கான காலக் கெடுவை, மத்­திய அரசு, மறு தேதி குறிப்­பி­டாமல் ஒத்தி வைத்­துள்­ளது.

ஒரு பொருளின் தயா­ரிப்பு முதல் விற்­பனை வரை, அனைத்து கட்­டங்­களின் விவ­ரங்­க­ளையும் அறிந்து கொள்ள, ‘பார்­கோடு’ தொழில்­நுட்பம்உத­வு­கி­றது. இத்­தொ­ழில்­நுட்­பத்தை, மருந்து நிறு­வ­னங்கள் அவற்றின் மருந்து புட்­டிகள், மருந்து பெட்­டிகள் உள்­ளிட்ட, முதல் நிலை ‘பேக்கிங்’ ல், வரும் ஜூலை 1ம் தேதி முதல், பயன்­ப­டுத்த வேண்டும் என, உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், இந்த உத்­த­ரவை மறு­தேதி அறி­விக்­கப்­படும் வரை ஒத்தி வைப்­ப­தாக, வெளி­நாட்டு வர்த்­தக தலைமை இயக்­கு­ன­ரகம் தெரி­வித்­துள்­ளது.பொது­மக்கள், உண்­மை­யான மருந்­து­களை எளிதில் கண்­ட­றிந்து, போலி­யான, தர­மற்ற மருந்­துகள் வாங்­கு­வதை தவிர்க்க, ‘பார்­கோடு’ தொழில்­நுட்பம் உதவும்.

மேலும், மருந்­து­களின் தரம் குறித்த விவ­ரங்கள் கார­ண­மாக, ஏற்­று­ம­தியும் அதி­க­ரிக்கும்.

Leave a Reply