இறக்குமதி செய்திகள்

மருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி

தனி நபர்கள் தங்கள் மருத்துவ தேவைக்காக குறைந்த அளவிலான மருந்துகளை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எனினும் இதற்கு அவர்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு உள்ளிட்ட தகவல்களுடன் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்துக்கு விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என்று அரசு கூறியுள்ளது. சென்னை விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் வாயிலாகவே இந்த மருந்துகளை இறக்குமதி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply