வணிகச் செய்திகள்

மருந்து கம்பெனிகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு 2013-14ம் நிதியாண்டில் ஏப்ரல் – டிசம்பர் காலக்கட்டத்தில்  மருந்து தயாரிக்கும் துறையில் அந்நிய நேரடி முதலீடு ரூ.7,656 கோடி  அளவிற்கு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 2012- 2013ம் ஆண்டில் இது ரூ.3,593 கோடியாக இருந்தது. இந்த தகவல் மத்திய  அரசின் தொழில்கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள  புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்து  கம்பெனிகளை வெளிநாட்டு கம்பெனிகள் வாங்குவது தொடர்பான  கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க மத்திய வர்த்தக மற்றும்  தொழில்துறை அமைச்சகம் சமர்பித்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை  நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன்

Leave a Reply