மருந்து பொருட்கள்

மருந்து துறை ஏற்றுமதி 2,500 கோடி டாலராக உயரும்

இந்திய மருந்து துறை நிறுவனங்களின் ஏற்றுமதி, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த, 2006-07ம் நிதியாண்டிலிருந்து, 2012-13ம் நிதியாண்டு வரையிலுமாக, இத்துறையின் ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி, 21.25 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

கடந்த, 2006-07ம் நிதி ஆண்டில், இந்தியாவின் மருந்து துறை நிறுவனங்களின் ஏற்றுமதி, 623 கோடி டாலராக இருந் தது. இது, 2012-13ம் நிதியாண்டில், 870கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகம், நடப்பு நிதியாண்டில், இத்துறையின் மூலம், 2,500 கோடி டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய, இலக்கு நிர்ணயித்து உள்ளது.

Leave a Reply