Uncategorizedசிறுதொழில் வளர்ச்சி உதவி

மாணவர் தொழில்முனைவோர் திட்டத்துக்கு கேரள அரசு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

கேரள மாநிலத்தில் உள்ள இளம் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர் தொழில்முனைவோர் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்த விவரம்: கேரள மாநில வருடாந்தர பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்படும் தொகையில் ஒரு சதவீதத்தை மாணவர் தொழில்முனைவோர் திட்டத்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 500 கோடியாகும்.

இத் திட்டத்தின்கீழ், மாணவர் தொழில்முனைவோர் பல்வேறு நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடவும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களும் இத் திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். கைத்தறி துறையில் புதுமைகளைப் புகுத்திய 6 மாணவர்கள் மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இத் திட்டத்தின்கீழ், மாணவத் தொழில்முனைவோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்து தரும். ஏற்கெனவே தொழில் தொடங்குவது தொடர்பாக சுமார் 1000 ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்திலிருந்து 5 மாணவர்களை அமெரிக்காவில் சிலிக்கன் வேலிக்கு அனுப்பும் அரசு விழா அண்மையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply