இறக்குமதி செய்திகள்

மார்ச் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 35 சதவீதம் உயர்வு

கடந்த மார்ச் மாதத்தில் பாமாயில் இறக்குமதி 35 சதவீதம் அதிகரித்து 5.46 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 4.04 லட்சம் டன்னாக இருந்தது. தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் இத்தகவலை இது தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் பாமாயில் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பிப்ரவரி மாதத்தில் பாமாயில் இறக்குமதி கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்திருந்தது. நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மார்ச் மாதத்தில் தான் அதிக பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பெருமளவு பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது.

Leave a Reply